Australia has the opportunity to capture the Champions Trophy - Hussey hopes ...
சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்ஸி நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
“ஒரு சிறந்த வீரர் எப்போதும் வீழ்ந்த நிலையிலேயே இருக்க மாட்டார். அந்த வகையில் விராட் கோலி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு, தான் சிறந்த வீரர் என்பதை மீண்டும் இந்த உலகத்துக்கு காட்டுவார்.
இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியைப் பொருத்த வரையில், வித்தியாசமான இடத்தில், வித்தியாசமான அணிகளுடன், வித்தியாசமான சூழ்நிலையில் விளையாடப்பட உள்ளது.
எனவே, நமது நம்பிக்கை, ஆட்டத்தை எவ்வாறு தொடங்குகிறோம், சரியான தருணத்தை எவ்வாறு கையாளுகிறோம் ஆகியவற்றை பொருத்தே ஆட்டத்தின் போக்கு அமையும்.
இந்திய பேட்ஸ்மேன்களை பொருத்தவரையில், அடித்து ஆடுவதற்கு உகந்த பந்து கிடைப்பதற்கு எவ்வளவு தாமதம் ஆனாலும் கூட, அதற்காகக் காத்திருந்து அதைக் கையாள வேண்டும்.
ஆடுகளத்தைப் பொருத்த வரையில் ஈரப்பதம் இல்லாமல் இருக்கும் பட்சத்தில், இந்தப் போட்டியில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்காற்றுவார்கள்.
இந்தமுறை சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்ற ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக கருதுகிறேன்” என்று மைக் ஹஸ்ஸி தெரிவித்தார்.
