பாகிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 39 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா, 130.1 ஓவர்களில் 429 ஓட்டங்கள் குவித்தது.
அதிகபட்சமாக ஸ்டீவன் ஸ்மித் 130 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 142 ஓட்டங்களுக்குச் சுருண்டது.
அந்த அணியில் சர்ஃப்ராஸ் அகமது அதிகபட்சமாக 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 39 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
490 ரன்களை இலக்காகக் கொண்டு தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி, கடைசி நாளான திங்கள்கிழமை 145 ஓவர்களில் 450 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.
137 ஓட்டங்கள் குவித்த ஆஸாத் ஷஃபிக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.
