Auckland Open Badminton Indian players in quarterfinals
ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா மற்றும் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை காலிறுதிக்கு முன்னேறி அசத்தினர்.
ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி நியூஸிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் டேரன் லியூவுடன் மோதினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-18, 21-7 என்ற செட் கணக்கில் டேரன் லியூவை வீழ்த்தினார் சாய் பிரணீத். காலிறுதியில் சாய் பிரணீத், இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை சந்திக்கிறார்.
அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சமீர் வர்மா 21-17, 21-19 என்ற செட்களில் ஹாங் காங்கின் செயுக் யு லீயை வீழ்த்தினார். காலிறுதியில் சமீர் வர்மா, சீனாவின் லின் டானுடன் மோதுகிறார்.
மற்றொரு பிரிவான ஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை 21-9, 21-12 என்ற செட்களில் தாய்லாந்தின் பாகின் குனா அனுவிட் - நாதாபட் டிரின்காஜீ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
