aswin selected for srilanka test series
கடந்த 4 ஒருநாள் தொடரிலும் நிராகரிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தோனி கேப்டனாக இருந்தபோது அவரது ஆஸ்தான சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின். ஆனால், கோலி கேப்டனனாக பிறகு அஸ்வின் ஓரங்கட்டப்படுவதாக தெரிகிறது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர் உட்பட கடந்த 4 ஒரு நாள் தொடர்களில் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அஸ்வினுக்குப் பதிலாக சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறக்கப்பட்டனர்.
அண்மையில் நடந்த யோ யோ டெஸ்ட் தொடரில், அஸ்வின் சிறப்பாக விளையாடினார். இதையடுத்து இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அஸ்வின் பெயர் இடம்பெற்றுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், இந்திய அணி, என் வீட்டு கதவைத் தட்டும் என நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
அதேபோல், நீண்ட நாட்களாக அணியில் சேர்க்கப்படாத அஸ்வின், இலங்கை தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். அஸ்வினின் நம்பிக்கை வீண் போகவில்லை. சொன்னதை செய்துகாட்டினார் அஸ்வின்.
