சென்னை

'நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள்' என்று இரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் அஸ்வின் தனது கண்களை தானம் செய்ய சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார்.

சென்னையைச் சேர்ந்த அஸ்வின் இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஆவர். தனது மயக்கும் சுழற்பந்து வீச்சு மூலம் நிறைய இரசிகர்களைப் பெற்றுள்ளார்.

அவர் சென்னையில் உள்ள ராஜன் கண் மருத்துவமனையில் நடந்த கண் தான் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்றார்.

அப்பொழுது அவர் தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதில் அவர், 'நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள்' என்று இரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வின், “கண்தானம் செய்வது என்பது எனது மனைவி பிரித்தியின் நெடுநாள் கனவாகும். எனது இரசிகர்களும் இதை பின்பற்றி தங்களது கண்களை தானம் செய்வார்கள் என்று நம்புகிறேன். இதில் உள்ள திருப்தி வேறு எதிலும் இல்லை. ஒவ்வொரு குடிமகனும் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்‘என்றுத் தெரிவித்தார்.