16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி; பாகிஸ்தான், சீனா பங்கேற்பது உறுதி!
சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் நடக்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
வரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையில் சென்னையில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. 7ஆவது முறையாக நடக்கும் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிக்காக சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன மைதானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதில், நடப்பு சாம்பியன் தென் கொரியா, முன்னாள் சாம்பியன்களான இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
கொல்கத்தாவை விரட்டியடித்து நம்பர் ஒன் இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ்!
ஆனால், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா இடையிலான உறவு காரணமாக இந்த ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் மற்றும் சீனா அணிகள் பங்கேற்பது உறுதியாகாமல் இருந்தது. இந்த நிலையில் ஹாக்கி போட்டியில் சீனா பங்கேற்பது கடந்த ஞாயிறன்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 3 முறை சாம்பியனான பாகிஸ்தானும் நேற்று ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது.
ஐபிஎல்லில் கொடிகட்டி பறக்கும் OLD IS GOLD ஆக தங்களது திறமையை நிரூபிக்கும் சீனியர்ஸ்!
இந்த ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியானது இரண்டு சுற்றுகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இரண்டு முறை மோத வேண்டும். அப்படி பார்க்கையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதும் என்று தமிழ்நாடு ஹாக்கி பிரிவு தலைவர் சேகர் ஜெ மனோகரன் கூறியுள்ளார். இந்த போட்டி குறித்து இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் கூறுகையில், வரும் செப்டம்பர் மாதம் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டு போட்டிக்கு இந்த போட்டி ஒரு முன்னோட்டமாக (லிட்டன் டெஸ்ட்) இருக்கும். வரும் 2024 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பாகவும் இந்தப் போட்டி இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.