Asia Cup India - Bangladesh crash 2nd match today

ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியில் இந்தியா - வங்கதேசம் மோதும் 2-வது ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா - வங்கதேசம் மோதும் ஆசிய கோப்பை வலைகோல் பந்தாட்டப் போட்டியின் இரண்டாவது ஆட்டம் வங்கதேச தலைநகர் டாக்காவில் இன்று நடைபெறுகிறது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை பந்தாடி அபார வெற்றி பெற்ற்அது. அதனால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு வங்கதேசத்தை சந்திக்க களம் இறங்குகிறது.

அதேநேரத்தில், வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் 0-7 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானிடம் படுதோல்வி அடைந்த நிலையில், இந்தியாவை வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற முனைப்போடு எதிர்கொள்கிறது. 

வங்கதேசத்தோடு ஒப்பிடுகையில் இந்திய அணி மிக வலுவாக உள்ளது. எஸ்.வி.சுநீல், லலித் உபத்யாய், ரமன்தீப் சிங், ஆகாஷ்தீப் சிங், ஹர்மான்பிரீத் சிங் போன்ற வலுவான வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர்.

எனவே, இந்த ஆட்டத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆட்டம் மாலை 6 மணிக்குத் தொடங்குகிறது.