Asianet News TamilAsianet News Tamil

அஷ்வினா கொக்கா..? ஒரு தடவை தான் மிஸ் ஆகும்.. எப்போதும் கிடையாது

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 
 

ashwin took first wicket of west indies
Author
Hyderabad, First Published Oct 12, 2018, 10:53 AM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் தொடங்கி நடந்துவருகிறது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை பழிதீர்க்கும் முனைப்பில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இதிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணியும் ஆடிவருகின்றன. 

ஹைதராபாத்தில் காலை 9.30 மணிக்கு தொடங்கி போட்டி நடந்துவருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஹோல்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பவல் மற்றும் பிராத்வைட் களமிறங்கினர். 

இந்த போட்டியில் முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு ஷர்துல் தாகூருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளுடன் தொடங்கினார் பிராத்வைட். பிராத்வைட் மற்றும் பவல் இருவரும் நிதானமாக தொடங்கினர். 

வேகப்பந்து வீச்சாளர்களால் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாதது ஒருபுறமிருக்க, ஷர்துல் தாகூர் 4வது ஓவரை வீசிக்கொண்டிருந்தபோது காயத்தால் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து அஷ்வின் பந்துவீச தொடங்கினார். 

ashwin took first wicket of west indies

அஷ்வின் வீசிய 6வது ஓவரின் 5வது பந்து பவலின் கால்காப்பில் பட, இந்திய வீரர்கள் அப்பீல் செய்தனர். அம்பயரும் அவுட் கொடுத்தார். ஆனால் பவல் ரிவியூ கேட்டார். அதில் பந்து பேட்டில் இன்சைட் எட்ஜ் ஆனது தெரியவந்தது. இதையடுத்து பவலுக்கு கொடுக்கப்பட்ட அவுட் கேன்சல் செய்யப்பட்டு பவல் ஆட்டத்தை தொடர்ந்தார். 

ashwin took first wicket of west indies

எனினும் அவரது ஆட்டம் நீடிக்கவில்லை. அஷ்வின் வீசிய 12வது ஓவரின் முதல் பந்தில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார் பவல். 32 ரன்களில் முதல் விக்கெட்டை வெஸ்ட் இண்டீஸ் அணி இழந்தது. இதையடுத்து பிராத்வைட்டுடன் ஹோப் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios