Asianet News TamilAsianet News Tamil

அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா!

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா கால் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளார்.

Aryna Sabalenka beat Czech Republic Marketa Vondrousova in Adelaide International 1 2023 and entered in to semi finals
Author
First Published Jan 6, 2023, 12:47 PM IST

ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2ஆவது சுற்று போட்டியில் பெலாரஸ் வீராங்கனையான விக்டோரியா அசரென்கா, சீனாவின் கின்வென் செங்கை 6-2, 7-5 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

IND vs SL: காட்டடி அடித்து கடைசி வரை கடுமையாக போராடிய அக்ஸர் படேல்..! பரபரப்பான 2வது டி20யில் இலங்கை வெற்றி

இதே போன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் ருமேனியாவின் இரின் கெமிலியா பெகு பிரெஞ்சு ஓபன் முன்னாள் சாம்பியன் ஆஸ்டாபென்கோவை 6-3, 6-0 என்ற நேர்செட் கணக்கில் தோற்கடித்து கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். இதே போன்றூ நடந்த மற்ற போட்டிகளில் ஆன்ஸ் ஜாபியர், லின்டா நோஸ்கோவா வெற்றி பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Also Read This: டி20 போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த கேப்டன்களில் ரோகித் சர்மா நம்பர்!

இதே போன்று கால் இறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 5 வீராங்கனையான அரினா சபலென்கா, செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த மார்கெட்டா வோண்ட்ரோசோவாவை 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். சபலென்கா 38 வெற்றிகளை பதிவு செய்துள்ளார். மார்கெட்டா 17 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளார். 

இலங்கைக்கு எதிரான 2ஆவது டி20: இந்தியா செய்த மிஸ்டேக்ஸ் என்னென்ன தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios