கேப்டன் விராத் கோலி தனது பிசியான கிரிக்கெட் ஷெட்யூல்களுக்கு மத்தியில் சொந்த கிரவுண்டிலும் சிக்ஸரும் ,ஃபோரும் விளாசியதன் விளைவாக நடிகையும், அவரது  மனைவியுமான அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

   இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கும் – பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 11ந் தேதி திருமணம் நடைபெற்றது. விரைவில் இவர்களுக்கு திருமணம் ஆகி ஓராண்டு நிறைவு பெற உள்ளது. தற்போது கோலி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் உள்ளார். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

   அண்மையில் மும்பை விமான நிலையத்திற்கு வருகை தந்த அனுஷ்கா சர்மா தனது வயிற்றை மறைத்தபடி சென்றுள்ளார். மேலும் கேமரா மேன்களையும் அருகில் நெருங்க விடாதபடி பாதுகாவலர்களையும் உடன் அனுஷ்கா சர்மா அழைத்து வந்திருந்தார். அத்துடன் ரசிகர்கள் யாருடனும் புகைப்படம் எடுத்துக் கொள்ளவும் அனுஷ்கா மறுத்துவிட்டார். வழக்கமாக விமான நிலையத்தில் புகைப்படம் எடுக்க வரும் ரசிகர்களுடன் ஆர்வத்துடன் அனுஷ்கா செல்பி எடுத்துக் கொள்வது வழக்கம்.

  திடீரென ரசிகர்களை கண்டு ஒதுங்குவது, கேமரா மேன்களை அருகில் நெருங்க விடாமல் இருப்பது போன்றதற்கு காரணம் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பது தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாள் வர உள்ள நிலையில் அன்றைய தினம் அனுஷ்கா சர்மா – விராட் கோலி தம்பதியினர் தாங்கள் பெற்றோர் ஆக உள்ள தகவலை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

   இதற்கு முன்பும் கூட ஒரு முறை அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானது. சுமார் ஒரு வாரம் கழித்து அது வதந்தி என்று அனுஷ்கா சர்மா விளக்கம் அளித்தார். மேலும் தான் தாய் ஆகும் தகவலை தனது கணவருடன் இணைந்து வெளிப்படையாக தெரிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். எனவே தற்போது அனுஷ்கா கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் அதனை வெளிப்படையாக கூறுவார் என்று எதிர்பார்க்கலாம்.