Asianet News TamilAsianet News Tamil

Poovamma: இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டுகள் தடை

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவரும், இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான எம்ஆர் பூவம்மாவ ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்விஅடைந்ததைத் தொடர்ந்து அடுத்த 2 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க ஊக்கமருந்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Anti-Doping Appeal Panel issues 2-year ban to Asiad medalist Poovamma
Author
First Published Sep 20, 2022, 12:30 PM IST

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்றவரும், இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையான எம்ஆர் பூவம்மாவ ஊக்கமருந்து பரிசோதனையில் தோல்விஅடைந்ததைத் தொடர்ந்து அடுத்த 2 ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க ஊக்கமருந்து மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

பாட்டியாலாவில் கடந்த ஆண்டு நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி நடந்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனை பூவம்மாவின் உடல் ரத்தம், சிறுநீர், உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அதை தேசிய ஊக்கமருந்துக்கு எதிரான அமைப்பு(NADA) பரிசோதனை செய்தது.

டி20 உலகக் கோப்பை: நியூஸிலாந்து அணி அறிவிப்பு: மூத்த வீரருக்கு 7வதுமுறை இடம்

பூவம்மாவின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் தடை செய்யப்பட்ட மெதில்ஹெக்சாமைன் என்ற மருந்துப் பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் முதல் 3 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து தேசிய ஊக்கமருந்துக்கான தடை அமைப்பு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த சஸ்பெண்டை எதிர்த்து பூவம்மா சார்பில் ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த தீர்ப்பாயம், பூவம்மாவுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தார் பஜ்ரங் பூனியா

இது குறித்து ஊக்கமருந்து தடுப்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைவர் அபினவ் பானர்ஜி பிறப்பித்த உத்தரவில் “  ஊக்கமருந்துக்கு எதிரான ஒழுங்கு குழு கடந்த ஜூன் மாதம் பிறப்பித்த உத்தரவை ஒதுக்கிவைத்து தேசிய ஊக்கமருந்துக்கு எதிரான அமைப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்தோம்.

இதில் சம்பந்தப்பட்ட வீராங்கனை பூவம்மாவுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்க பரிந்துரைக்கிறோம். அவரிடம் இருந்து  எடுக்கப்பட்ட மாதிரிகளில் தடை  செய்யப்பட்ட மருந்துகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உறுதியானது. அதனால் அவர் தகுதி நீக்கப்பட்டு, அவரிடம் இருந்து பரிசுகள், மெடல்கள், புள்ளிகள் பறிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

2018ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டர் மகளிர் தொடர் ஓட்டம், கலப்பு இரட்டை தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்றவர். 2014ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 400 மீட்ட தொடர் ஓட்டத்தலும் பூவம்மா தங்கப்பதக்கம் வென்றவர்

மூன்றரை ஆண்டுக்கு பிறகு அவரை டி20 அணியில் எடுக்க என்ன காரணம்..? கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம்

2012 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 தனிநபர் ஓட்டத்தில் வெண்கலத்தையும் வென்ற பூவம்மாவுக்கு, 2015ம் ஆண்டு அர்ஜூனா விருது வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு ஊக்க மருந்துசர்ச்சையில் பூவம்மா சிக்கியதால், டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் வாய்ப்பையும் இழந்தார், அதன்பின் தேசிய பயிற்சியிலிருந்தும் பூவம்மா விலகினார். 

திருவனந்தபுரத்தில் மார்ச் 12 மற்றும் 23ம் தேதி நடந்த இந்தியன் கிராண்ட் பிரிக்ஸ்-1 மற்றும் 2 ஆகியவற்றில் பூவம்மா வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மலப்புரத்தில் நடந்த பெடரேஷன் கோப்பையிலும் பூவம்மா வெள்ளி வென்றிருந்தார். இந்தப் பதக்கங்கள் அனைத்தும் அவரிடம் இருந்து பறிக்கப்படும்.

Follow Us:
Download App:
  • android
  • ios