ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கும் நியூஸிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதில் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் மார்டின் கப்தில் 7-வது முறையாக டி20 உலகக் கோப்பையில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.

t20 ind vs aus: 6வது பவுலரா? உத்தேச இந்திய அணியில் யாருக்கு இடம்? ஆஸியுடன் நாளை முதல் டி20 போட்டி

இதற்கு முன் முன்னாள் நியூஸிலாந்து வீரர்கள் நாதன் மெக்கலம், ராஸ் டெய்லர் ஆகியோர் 6 உலகக் கோப்பையில்தான் இடம் பெற்றிருந்தார்கள். 8வது உலகக் கோப்பையில் விளையாடியவர்களில் டுவைன் பிராவோ, கிறிஸ் கெயில், முகமது மகமதுல்லா, முஷ்பிகுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், ரோஹித் சர்மா ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

35வயதான மார்டின் கப்திலின் அதிரடியான தொடக்கம் நிச்சயம் எதிரணிக்கு கிலி ஏற்படுத்தும், அவரின் அனுபவம், தொடக்கத்திலேயே ரன்ரேட்டை உச்சத்துக்கு கொண்டு செல்லும் துணிச்சல் ஆகியவற்றால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தார் பஜ்ரங் பூனியா

வெலிங்டன் பயர்பேர்ட்ஸ் என அழைக்கப்படும் பின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல் இருவரும் முதல்முறையாக உலகக் கோப்பையில் இடம் பெற்றுள்ளனர். வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே, லாக்கி பெர்குஷன் தனது இடத்தை தக்கவைத்துள்ளார். விக்கெட் கீப்பராக டேவன் கானே இடம் பெற்றுள்ளார். 

கைல் ஜேமிஸன் காயத்திலிருந்து குணமாகததையடுத்து அவர் இடம் பெறவில்லை. டோட் ஆஸ்டில், டிம் ஷீபெர்ட் ஆகியோரும் தேர்வு செய்யப்படவில்லை

டி20 உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கு முன்பாக வங்கதேசம், ஆஸ்திரேலியா அணிகளுடன் முத்தரப்பு டி20 தொடரில் நியூஸிலாந்து அணியின் உலகக் கோப்பை அணி விளையாட உள்ளது. உலகக் கோப்பைக்கு தயாராக நியூஸிலாந்துக்கு இந்த முத்தரப்பு டி20 தொடர் சிறந்த வாய்ப்பாக அமையும்.
அக்டோபர் 22ம் தேதி சிட்னி மைதானத்தில் நியூஸிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியைச் சந்திக்கிறது. 

இதுதான் நம்ம அணி; இதுக்கு சப்போர்ட் பண்ணுங்க..! இந்திய அணி தேர்வை விமர்சித்தவர்களுக்கு கவாஸ்கர் சவுக்கடி

நியூஸிலாந்து அணி விவரம்:

கேன் வில்லியம்ஸன்(கேப்டன்), பின் ஆலன், டிரன்ட் போல்ட், மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேவன் கான்வே, லாக்கி பெர்குஷன்,மார்டின் கப்தில், ஆடம் மில்னே, டேர்ல் மிட்ஷெல், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மிட்ஷெல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுதி