anderson will give tough to kohli said mcgrath

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஜேம்ஸ் ஆண்டர்சன் கோலிக்கு சவாலாக இருப்பார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பவுலர் கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு செல்ல உள்ள இந்திய அணி, ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் ஆட உள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் கிளென் மெக்ராத், இப்போது இருக்கும் கோலி, கண்டிப்பாக 2014ம் ஆண்டு இருந்த கோலி அல்ல. தற்போது அனுபவம் வாய்ந்த சிறந்த வீரராக கோலி திகழ்கிறார். ஆனால் அதேநேரத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் ஜேம்ஸ்(ஜிம்மி) ஆண்டர்சன் சிறப்பாக பந்துவீசினால், அது கோலிக்கு சவாலாக இருக்கும். அதனால் கடினமாக உழைத்து ஆட தயாராக வேண்டும். இந்த சவாலை பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

இங்கிலாந்தின் சூழல் சற்று கடினமானது. கவுண்டி போட்டிகளில் புஜாரா ரன்களை குவிக்காவிட்டாலும், அந்த சூழலுக்கு ஏற்ப செட் ஆகிவிட்டார். இந்திய அணியிலும் புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய சிறந்த பவுலர்கள் உள்ளனர் என கிளென் மெக்ராத் தெரிவித்துள்ளார்.