ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.​சிந்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீராங்கனையான சிந்து தனது முந்தைய சுற்றில் 21-13, 13-21, 21-18 என்ற செட்களில் தாய்லாந்தின் நிட்சாவ்ன் ஜின்டாபோலை வீழ்த்தி​னார். 

ஜின்டாபோலை இத்துடன் மூன்று முறை சந்தித்துள்ள சிந்து, அதில் 2 முறை வெற்றி பெற்றுள்ளார். 

அதேபோன்று மற்றொரு பிரிவில் இந்தியாவின் ஹெச்.​எஸ்.​பிரணாய் போட்டித் தரவரிசை​யில் 8-வது இடத்​தில் இருந்த தைவானின் செளடியன் சென்னை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோன்று கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - ​சிக்கி ரெட்டி இணை தனது முதல் சுற்றில், ஜெர்மனியின் மார்வின் எமில் சிடெல் - ​லின்டா எல்ஃபர் இணையை வென்றது. 

சோப்ரா - ​சிக்கி ரெட்டி இணை அடுத்த​சுற்றில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் சீனாவின் வாங்யிலியு - ​ஹுவாங் டாங்பிங் இணையை சந்திக்கிறது.