After five years the champion became the Chennai S.R.M. University team ...
பெரியநாயக்கன் பாளையத்தில் நடைபெற்ற ஆர்.ராமசாமி நினைவு 49-ஆவது மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி சாம்பியன் ஆனது.
அக்வா விளையாட்டுக் கழகம் சார்பில் கோவை, பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள வெங்கடகிருஷ்ணன் உள் விளையாட்டு அரங்கில் ஆர்.ராமசாமி நினைவு 49-ஆவது மாநில அளவிலான கைப்பந்து போட்டி 4 நாள்கள் நடைபெற்றது.
லீக் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டியின் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணியும், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக அணி 26-24, 26-24, 25-23 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றதோடு, வாகையும் சூடியது.
சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியனாகி இருக்கிறத் என்பது குரிப்பிடத்தக்கது. இந்த அணிக்கு டெக்ஸ்மோ கோப்பையும், ரூ.40 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டன.
சுங்க வரித் துறை அணி இரண்டாமிடம் பெற்று ரூ.35 ஆயிரமும், மூன்றாமிடம் பெற்ற வருமான வரித் துறை அணிக்கு ரூ.30 ஆயிரமும் பரிசளிக்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவுக்கு அக்வா குழும நிர்வாக இயக்குநர் ஆர்.குமாரவேலு, ஹோமய் குமாரவேலு ஆகியோர் தலைமை தாங்கினார்.
கோவை மாவட்ட வாலிபால் சங்க தலைவர் வெங்கிடுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. மா.சின்னராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அக்வா குழும நிறுவனங்களின் செயல் இயக்குநர் ரோமித் ராவ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளை வழங்கினார்.
