afiridi has a pet lion and fans shocked
நாய், பூனை போன்ற விலங்குகளை வீட்டில் செல்லப்பிராணியாக வளர்ப்பது வழக்கம். ஆனால், அஃப்ரிடியோ சிங்கத்தை வளர்த்து வருகிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான ஷாகித் அஃப்ரிடி, வீட்டில் சிங்கத்தை வளர்த்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
பாகிஸ்தானில் மட்டுமல்லாமல் இந்தியாவிலும் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் அஃப்ரிடி. அதிரடி பேட்டிங், அசத்தலான பவுலிங் என சிறந்த ஆல்ரவுண்டராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் கோலோச்சியவர்.
1996 முதல் 2017ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். ஷாகித் அஃப்ரிடியின் அதிரடியான பேட்டிங் காரணமாக, அவரை பூம் பூம் என ரசிகர்கள் அழைப்பது வழக்கம்.
அஃபிரிடிக்கு அக்ஷா, ஆஜ்வா, ஆன்ஷா, அஸ்மாரா ஆகிய 4 மகள்கள் உள்ளனர். அவ்வப்போது மகள்களின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அஃப்ரிடி பதிவிடுவது வழக்கம். அந்த வகையில், அவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படங்கள், ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அஃப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவற்றில் ஒன்று, தனது மகளுடன் உடற்பயிற்சி அறையில் இருக்கும் புகைப்படம். மானுக்கு அஃப்ரிடி பாலூட்டும் புகைப்படம் ஒன்றையும், அஃப்ரிடியின் மகள் புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். அஃப்ரிடி விக்கெட் வீழ்த்தியதும் இரு கைகளை உயர்த்தி கொண்டாடுவார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">Great to spend time with loved ones. Best feeling in the world to have my daughter copy my wicket taking celebrations. And yes don't forget to take care of animals, they too deserve our love and care :) <a href="https://t.co/CKPhZd0BGD">pic.twitter.com/CKPhZd0BGD</a></p>— Shahid Afridi (@SAfridiOfficial) <a href="https://twitter.com/SAfridiOfficial/status/1005488474139648007?ref_src=twsrc%5Etfw">June 9, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அதேபோல, அவரது மகள் இரு கைகளையும் உயர்த்தியபடி நிற்கிறார்; அஃப்ரிடி மகளுக்கு பின்னால் ஒரு சிங்கம் படுத்திருக்கிறது. இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அதிர்ந்துவிட்டனர்.
அஃப்ரிடி வீட்டில் சிங்கம் வளர்க்கிறீர்களா? இது சட்டப்படி குற்றம், மானையும் சிங்கத்தையும் ஒன்றாக வளர்க்காதீர்கள் என்றெல்லாம் அடுக்கடுக்கான பதிவுகளை ரசிகர்கள் பதிவிட்டனர்.
