ஆப்கானிஸ்தான் ஸ்பின் பவுலர் ரஷீத் கான், கிரிக்கெட் உலகில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி டெஸ்ட் அந்தஸ்தை பெற்றுள்ளது. 2019 உலக கோப்பை தகுதி சுற்று இறுதி போட்டியில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஆப்கானிஸ்தான் அணியின் வளர்ச்சி சிறப்பானது. சர்வதேச அணிகளுக்கு சவால் விடும் அளவிற்கு ஆப்கானிஸ்தான் அணி வளர்ச்சியடைந்துள்ளது. அதிலும் அந்த அணியின் ஸ்பின் பவுலர் ரஷீத் கான் அபாரமாக பந்துவீசுகிறார். வளர்ந்து வரும் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார்.

உலக கோப்பை தகுதி சுற்று இறுதி போட்டியில், புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். குறைந்த போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை எடுத்த பெருமையை பெற்றுள்ளார். வெறும் 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகளை ரஷீத் வீழ்த்தியுள்ளார்.

சர்வதேச அளவில் இதுவே அதிவேக 100 விக்கெட். ரஷீத் கானுக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தில் உள்ளார். 52 போட்டிகளில் ஸ்டார்க் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.