Afghanistan match with international teams in india BCCI announced
இந்தியா வரும் சர்வதேச கிரிக்கெட் அணிகள், ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இருதரப்பு கிரிக்கெட் தொடர்களுக்காக சர்வதேச கிரிக்கெட் அணிகள் இந்தியா வருகின்றன. அதன்படி, ஆப்கானிஸ்தானுடன் ஒரு பயிற்சி ஆட்டத்தில் விளையாடும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச அனுபவத்தை அளிக்கும் விதமாக இந்த முயற்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் உறவுகள் குறித்த கலந்தாலோசனைக்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள பிசிசிஐ செயலர் (பொறுப்பு) அமிதாப் சௌத்ரி, இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதனிடையே, ஆப்கானிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் மூன்று ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடருக்கான 2-வது மைதானமாக டேராடூன் மைதானத்தில் அனுமதி வழங்கியதற்காக பிசிசிஐக்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.
இந்தத் தொடருக்காக கிரேட்டர் நொய்டாவில் உள்ள மைதானத்திலும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
