Afghanistan and Bangladesh players joined in ICC World XI team
மேற்கிந்தியத் தீவுகளுடன் மோதும் ஐசிசி உலக லெவன் அணியில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், வங்கதேசத்தின் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவில் சூறாவளியால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் மைதானங்களை சீரமைக்கும் பணிக்காக நிதி திரட்ட கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளுடன், ஐசிசி உலக லெவன் என்ற பெயரிலான அணி மோதுகிறது.
இந்த அணிகள் மோதும் ஆட்டம் வரும் மே 31-ஆம் தேதி இலண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், இந்தப் போட்டியில் ஐசிசி உலக லெவன் அணியில் ரஷீத் கான், ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே அணியில் பாகிஸ்தானின் ஷாஹித் அப்ரிதி, ஷோயப் மாலிக், இலங்கையின் திசர பெரேரா ஆகியோர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் தலைமையிலான இந்த அணியில், எதிர்வரும் நாள்களில் மேலும் பல பிரபல வீரர்கள் இணைவார்களாம்.
