இந்திய முன்னள் வீரர் எம்.எஸ். தோனி குழந்தையை போல் நாய்களை பராமரித்து வருகிறார். மகள் ஜீவா அப்பாவுக்கு உதவுகிறார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. 

'தல' தோனி 

Ms Dhoni viral video with dog: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. 'மிஸ்டர் கூல்' எனப்படும் தோனி இந்திய கிரிக்கெட்டை தனது தனித்துவ தலைமைப்பண்பு மூலம் உச்சிக்கு கொண்டு சென்றவர். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். 

தோனிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஒவ்வொரு ரசிகர்களும் அவரை ஐபிஎல்லில் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். பைக் பிரியரான தோனி, நாய் வளர்ப்பதிலும் மிகவும் ஆர்வமுடன் உள்ளார். இந்நிலையில், அவர் தனது மகள் ஜீவாவுடன் இணைந்து நாயை பராமரிக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. 

நாயை பராமரிக்கும் வீடியோ 

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மகேந்திர சிங் தோனி மற்றும் அவரது மகள் இருவரும் நாயை பராமரிக்கின்றனர். அதாவது தோனி மிகவும் கூலாக தனது செல்ல நாய் மீது சீப்பு கொண்டு சீவி விடுகிறார். தோனியின் மகள் ஜீவா அதற்கு உதவி செய்வதுபோல் வீடியோ காட்சியில் பதிவாகி உள்ளது. 
விலங்குகள் மீது தோனி கொண்டுள்ள அன்பு ரசிகர்களின் மனதை நெகிழச் செய்கிறது. தனது ரசிகர்களைப் போலவே, விலங்குகள் மீதும் அவருக்கு அதிக பாசம் உள்ளதாக இந்த வீடியோவை பார்க்கும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Scroll to load tweet…

நாய்களை விரும்பி வளர்க்கும் தோனி 

மகேந்திர சிங் தோனிக்கு நாய்கள் மீது அதிக பாசம் உள்ளது. அவரிடம் பல வகையான வெளிநாட்டு நாய்கள் உள்ளன. தோனியிடம் உள்ள நாய்களின் மதிப்பு சுமார் ரூ.3,60,000 ஆகும். அவரிடம் லில்லி மற்றும் கப்பர் என்ற இரண்டு ஹஸ்கி நாய்கள் உள்ளன. சாம் என்ற பெல்ஜியம் மாலினோயிஸ் நாயும் அவரிடம் உள்ளது. இது தோனியின் விருப்பமான நாய் ஆகும். இதேபோல் ஜோயா என்ற ஜெர்மன் ஷெப்பர்ட் நாயும் உள்ளது.

View post on Instagram

குழந்தையைப் போல கவனிப்பு 

'கூல் கேப்டன்' தோனி தனது மகள் ஜீவாவைப் போலவே தனது நாய்களையும் மிகவும் நேசிக்கிறார். அவர் அடிக்கடி நாய்களுடன் இருக்கும் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்கிறார். நாய்கள் மீது தோனி கொண்டுள்ள அன்பைப் பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் தோனி இன்னும் கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தோனியை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை இன்றும் குறையவில்லை. இன்ஸ்டாகிராமில் 49.3 மில்லியன் மக்கள் தோனியை பாலோ செய்வது குறிப்பிடத்தக்கது.