7 Indian golfers qualify for Asian Games
ஆசியப் போட்டிகளுக்கு இந்திய கோல்ஃப் வீரர்கள் 7 பேர் தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.
வரும் ஆகஸ்ட் மாதம் ஆசியப் போட்டிகள் ஜாகர்த்தாவில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில் இந்தியா சார்பில் தீக்ஷா தாகர், அதில் பேடி உள்ளிட்டோர் தகுதி பெற்றுள்ளனர்.
மேலும்ம் ஷிட்ஜி நவித் கெளல், ஹரிமோகன் சிங், ராயன் தாமஸ், ஆடவர் பிரிவிலும், ரித்திமா திலாவரி, சிபாத் சாகூ ஆகியோர் மகளிர் பிரிவும் தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 22 முதல் 30-ஆம் தேதி வரை டெல்லியில் இதற்கான தகுதிச் சுற்று தேர்வு நடைபெற்றது. இதில் சிறந்த ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டு ஆசியப் போட்டிகளுக்கு அனுப்பப்படுகின்றனர்.
ஆசியப் போட்டிகளில் கோல்ஃப் விளையாட்டில் தைவான், கொரியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட வலுவான அணிகளுடன் இந்தியா மோதுகிறது.
கோல்ஃப் போட்டிகள் ஆகஸ்ட் 21 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
