376 runs in the first innings Pakistani ...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது முதல் இன்னிங்ஸில் 376 ஓட்டங்கள் எடுத்து பட்டையைக் கிளப்பியுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டொமினிகாவில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 69 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாளான வியாழக்கிழமை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியில் யூனிஸ்கான் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் மிஸ்பா உல் ஹக் களம்புகுந்தார். இதன்பிறகு சதமடித்த அசார் அலி, 334 பந்துகளில் 127 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர், களம்புகுந்த ஆசாத் ஷபிக் 17 ஓட்டங்களில் வெளியேற, மிஸ்பா உல் ஹக் 59 ஓட்டங்களிலும், முகமது ஆமிர் 7 ஓட்டங்களிலும், யாசிர் ஷா ஓட்டங்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் அபாரமாக ஆடிய சர்ஃப்ராஸ் அஹமது 73 பந்துகளில் 51 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

கடைசி விக்கெட்டாக முகமது அப்பாஸ் 4 ஓட்டங்களில் நடையைக் கட்ட, பாகிஸ்தானின் முதல் இன்னிங்ஸ் 146.3 ஓவர்களில் 376 ஓட்டங்களோடு முடிவுக்கு வந்தது.

மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோஸ்டான் சேஸ் 4 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி மூன்றாவது நாளான நேற்று 28.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 46 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பாவெல் 31 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பிரத்வெயிட் 12 ஓட்டங்கள், ஹெட்மையர் 1 ஓட்டத்துடன் களத்தில் இருக்கின்றனர்.

அடுத்த ஆட்டத்தில் அடித்து ஆடினால் தான் பாகிஸ்தான் ஓட்டக்குவிப்பை முறியடித்து முன்னிலை பெறும் மே.தீவுகள்.