சஹல்-தனஸ்ரீ மனக்கசப்புக்கு இந்த 3 விஷயங்கள் தான் காரணமா?
யுஸ்வேந்திர சஹல்-தனஸ்ரீ வர்மா உறவில் விரிசல் ஏற்பட்டதற்கான 3 காரணங்கள் வெளியாகியுள்ளன. அது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
சஹல்-தனஸ்ரீ
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி ஸ்பின் பவுலராக திகழந்து வருபவர் யுஸ்வேந்திர சஹல். இவருக்கும் பிரபல நடனக் கலைஞருமான தனஸ்ரீ வர்மாவுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில், சஹல்-தனஸ்ரீ உறவில் விரிசல் ஏற்படுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இன்ஸ்டாகிராமில் இருவரும் ஒருவரையொருவர் அன்பாலோ செய்தது இந்த பேச்சுகளை வலுவாக்கியுள்ளது. அதே வேளையில் சஹல்-தனஸ்ரீ உறவில் விரிசல் ஏற்பட்டு உண்மைதான் என சில செய்தி நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. சஹல்-தனஸ்ரீ உறவில் விரிசல் ஏற்பட 3 விஷயங்கள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
தொழில் தான் முதன்மை
தனஸ்ரீ வர்மா நல்ல நடனக் கலைஞரும், நடன அமைப்பாளரும் ஆவார். இவர் பிரபல பல் மருத்துவரும் கூட. நிறைய தொழில்கள் இருப்பதால் எப்போதும் பிஸியாகவே காணப்படுவாராம். சஹலும் ஒருபக்கம் உள்ளுர் கிரிக்கெட்டில் பிஸியாக வலம் வர இருவருக்கும் மனம் விட்டு பேச நேரம் கிடைக்கவில்லை. இருவரும் நீண்ட நாட்களாக பிரிந்து வாழ்வதால் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சஹலுக்கு நேரம் ஒதுக்குவதில்லை
மிக முக்கியமாக தனஸ்ரீ வர்மா யுஸ்வேந்திர சஹலுடன் அதிக நேரம் செலவழிப்பதில்லை என கூறப்படுகிறது.
அவர் சாஹலை விட மற்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தன்னுடைய தொழிலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் தனஸ்ரீ வர்மா சஹலுக்கு நேரம் ஒதுக்குவதில்லை எனவும் குற்றம்சாட்டப்படுகிறது. மேலும் எந்த ஒரு பெரிய பண்டிகை அல்லது பிறந்தநாள் போன்ற சுப நிகழ்ச்சிகளிலும் இருவரும் ஒன்றாக செல்வதில்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன.
நண்பருடன் எடுத்த புகைப்படம்
தனஸ்ரீ வர்மா போட்டோஷீட்டில் அதீத ஆர்வம் கொண்டவர். விதவிதமான புகைப்படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருவதை அவர் வாடிக்கையாளர் வைத்துள்ளார். இதில் ஒன்றும் பிரச்சனையில்லை. ஆனால் அவர் தனது நண்பரும், நடன இயக்குநருமான பிரதீக் உடேகருடன் இணைந்து எடுத்த புகைப்படம் பிரச்சினைக்கு மூல காரணமாக அமைந்தது. ஏனெனில் தனஸ்ரீ வர்மா, பிரதீக் உடேகருடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. இதன்பிறகு அந்த படத்தை அவர் டெலீட் செய்து விட்டார். ஆனாலும் சஹல் தனஸ்ரீ வர்மா உறவில் விரிசல் ஏற்பட இது ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
ஒரு கணவன் மனைவி குடும்ப உறவுகளுக்கு அதிக நேரம் கொடுக்கவில்லை என்றால் அது நிச்சயமாக எதிர்காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதற்கு சஹல் தனஸ்ரீ வர்மா ஒரு உதாரணம் என பலரும் கூறுகின்றனர்.