ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் போட்டியில்,தென் ஆப்ரிக்கா வெற்றி பெரும் சூழலில் உள்ளத்தால்,அதனை கொண்டாடும் விதமாக,முதலில் வரும்  2000 கிரிக்கெட் ரசிகர்களுக்கு டிக்கெட்  இலவசமாக வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தென் ஆப்ரிக்காவுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள  ஆஸ்திரேலியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி  வருகிறது.நடந்து முடிந்த 3 போட்டிகள் முடிவில்,தென் ஆப்ரிகா 2-1 என்ற  நிலையில் முன்னிலை வகித்து வருகிறது

தென் ஆப்ரிக்காவுக்கு வெற்றி வாய்ப்பு....!

4 ஆவது டெஸ்ட் கடைசி நாளான இன்று,வெற்றி வாகை சூட போவது  யார் என்பதை மிகவும் ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்..

ஆஸ்திரேலியா 524  ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது, ஆனால் கையில் 7 விக்கெட்டுகள் மட்டுமே கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.

இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரில், வெற்றி வாகை சூடும் வாய்ப்பு தென் ஆப்ரிக்காவிற்கு தான் அதிகம் உள்ளதால்,வெற்றியை கொண்டாட  ஆயத்தமாகி வருகிறார்கள் ரசிகர்கள்..

வெற்றியை கொண்டாடவே முதலில் வரும் 2000  ரசிகர்களுக்கு இலவச  டிக்கெட் என அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது வாரியம்.