வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி வென்றது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நாளை கொல்கத்தாவில் நடக்கிறது. 

இந்த போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் இருந்து தோனி நீக்கப்பட்டுள்ளார். எனவே இளம் வீரர் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செயல்பட உள்ளார். விராட் கோலிக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட உள்ளார். நீண்டகாலமாக இந்திய அணியில் ஆடுவதற்காக காத்திருக்கும் ஹர்திக் பாண்டியாவின் சகோதரர் குருணல் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், ராகுல், கலீல் அகமது ஆகியோருக்கும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. 


வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், ராகுல், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், மனீஷ் பாண்டே, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, சாஹல்.