அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மில்டன் ஷும்பா - ரியான் பர்லின் பொறுப்பான பேட்டிங்கால், சரிவிலிருந்து மீண்ட ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 152 ரன்களை குவித்து 153 ரன்கள் என்ற சவலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது.
ஜிம்பாப்வே அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது. 2வது போட்டி இன்று நடந்துவருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி, 10 ஓவரில் 64 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மில்டன் ஷும்பா மற்றும் ரியான் பர்ல் ஆகிய இருவரும் பொறுப்புடன் விக்கெட்டை இழந்துவிடாமல் கவனமாக ஆடிய அதேவேளையில், அடித்தும் ஆடினர். ஷும்பா - பர்ல் ஆகிய இருவருமே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.
ஷும்பா 27 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 46 ரன்களையும், பர்ல் 33 பந்தில் 37 ரன்களையும் அடிக்க, 20 ஓவரில் 152 ரன்களை அடித்து 153 ரன்கள் என்ற சவாலான இலக்கை அயர்லாந்துக்கு நிர்ணயித்துள்ளது ஜிம்பாப்வே அணி.
