Asianet News TamilAsianet News Tamil

ZIM vs NED: கடைசி போட்டியிலும் நெதர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது ஜிம்பாப்வே

நெதர்லாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி ஒருநாள் தொடரை 2-1 என வென்றது.
 

zimbabwe beat netherlands by 7 wickets in last odi and win series by 2 1
Author
First Published Mar 25, 2023, 7:35 PM IST

நெதர்லாந்து அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் போட்டியில் நெதர்லாந்து அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டியில் ஜிம்பாப்வே அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. 

தொடர் 1-1 என சமனடைந்த நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

நெதர்லாந்து அணி:

விக்ரம்ஜித் சிங், மேக்ஸ் ஓ டௌட், வெஸ்லி பேர்ஸி, மூசா அகமது, காலின் ஆக்கர்மேன், ஸ்காட் எட்வர்ட்ஸ் (கேப்டன், விக்கெட் கீப்பர்), தேஜு நிதாமனுரு, பால் வான் மீகரென், ஷரிஸ் அகமது, ஃபிரெட் கிளாசன், ஆரியன் தத்.

IPL 2023: ஜானி பேர்ஸ்டோவுக்கு மாற்றாக ஆஸி., அதிரடி ஆல்ரவுண்டரை தட்டி தூக்கியது பஞ்சாப் கிங்ஸ்

ஜிம்பாப்வே அணி:

கிரைக் எர்வின் (கேப்டன்), வெஸ்லி மாதவெர், கேரி பேலன்ஸ், ஷான் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராஸா, ரியான் பர்ல், கிளைவ் மதண்டே, பிரண்டன் மாவுட்டா, ரிச்சர்ட் இங்கரவா, டெண்டாய் சத்தாரா, பிளெஸ்ஸிங் முஸாரபானி.

முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்ரம்ஜித்(27), மேக்ஸ் ஓ டௌட் (38) ஆகிய இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் அடித்தனர். 3ம் வரிசையில் இறங்கிய மூசா அகமது 29 ரன்களும், ஆக்கர்மேன் 37 ரன்களும் அடித்தனர். கேப்டன் எட்வர்ட்ஸ் நன்றாக ஆடி 34 ரன்கள் அடித்தார். இவர்கள் அனைவருக்குமே நல்ல தொடக்கம் கிடைத்தாலும், யாருமே அதை பெரிய இன்னிங்ஸாக மாற்றாததால் நெதர்லாந்து அணியின் ஸ்கோர் உயரவில்லை. 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் அடித்தது நெதர்லாந்து அணி.

IPL 2023: டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடள்ஸ் அணியின் வலுவான ஆடும் லெவன்..! மிரட்டலான டீம்

232 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் மாதவெர் மற்றும் கிரைக் எர்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்களை குவித்தனர். சிறப்பாக ஆடிய மாதவெர் அரைசதம் அடித்தார். ஆனால் 50 ரன்களுக்கே ஆட்டமிழந்தார். எர்வின் 44 ரன்கள் அடித்தார். கேரி பேலன்ஸும் ஷான் வில்லியம்ஸும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 106 ரன்களை குவித்தனர். ஷான் வில்லியம்ஸ் 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த கேரி பேலன்ஸ் 64 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார். 42வது ஓவரில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணி 2-1 என ஒருநாள் தொடரை வென்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios