இந்தியா ஆஸ்திரேலியா இடையே கான்பெராவில் நடந்துவரும் முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, கேஎல் ராகுலின் அரைசதம்(51) மற்றும் ஜடேஜாவின் கடைசி நேர அதிரடி(23 பந்தில் 44 ரன்கள்) பேட்டிங்கால் 20 ஓவரில் 161 ரன்கள் அடித்தது.

மிட்செல் ஸ்டார்க் வீசிய கடைசி ஓவரில் பேட்டிங் ஆடும்போது ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பந்து அடித்ததால், ஐசிசி விதிப்படி, கன்கஷன் மாற்று வீரராக சாஹல் 2வது இன்னிங்ஸில் களமிறங்கினார்.

162 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக ஆரோன் ஃபின்ச்சும் ஷார்ட்டும் இறங்கினர். ஃபின்ச்சை 35 ரன்களில், ஜடேஜாவின் மாற்று வீரராக களமிறங்கிய சாஹல் வீழ்த்தினார். அதன்பின்னர் களத்திற்கு வந்த, ஒருநாள் கிரிக்கெட்டில் 2 சதங்களை விளாசி மிரட்டிய ஸ்மித்தையும் 12 ரன்களில் வீழ்த்தினார் சாஹல்.

4ம் வரிசை வீரராக ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னனும், ஒருநாள் கிரிக்கெட்டில் காட்டடி அடித்தவருமான மேக்ஸ்வெல் களத்திற்கு வந்த நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு அவர் செய்ய வேண்டிய பணியை செய்யவிடாமல் நடராஜன் வெறும் 2 ரன்களுக்கு வெளியேற்றினார்.

இதையடுத்து ஷார்ட்டுடன் மோய்ஸஸ் ஹென்ரிக்ஸ் ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார்.