கேகேஆர் அணி உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸை பென்ச்சில் உட்கார வைத்ததை கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்த சீசனின் முதற்பாதி கேகேஆர் அணிக்கு சரியாக அமையவில்லை. இந்த சீசனில் கேகேஆர் அணி புதிய கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களமிறங்கி ஆடிவருகிறது.

முதல் சில போட்டிகளில் வெற்றி பெற்ற கேகேஆர் அணி, அதன்பின்னர் படுமோசமாக சொதப்பி தோல்விகளை தழுவிவருகிறது. இதுவரை ஆடியுள்ள 9 போட்டிகளில் 3 வெற்றிகளை மட்டுமே பெற்று புள்ளி பட்டியலில் 8ம் இடத்தில் உள்ளது.

டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில், ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த உலகின் முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான பாட் கம்மின்ஸ் கேகேஆர் அணியின் ஆடும் லெவனில் எடுக்கப்படவில்லை. சர்வதேச கிரிக்கெட்டில் டாப் ஆல்ரவுண்டரான கம்மின்ஸுக்கு ஆடும் லெவனில் இடம் வழங்காமல் கேகேஆர் அணி பென்ச்சில் உட்காரவைத்தது யுவராஜ் சிங்கிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக கேகேஆர் ஆடிய போட்டியில் டேனியல் சாம்ஸின் ஓவரில் சிக்ஸர் மழை பொழிந்து கேகேஆருக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்த கம்மின்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களில் 50 ரன்களை வாரி வழங்கினார். அதன் விளைவாக, டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கம்மின்ஸ் உட்கார வைக்கப்பட்டார்.

இந்நிலையில், கேகேஆரின் இந்த செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள யுவராஜ் சிங், பாட் கம்மின்ஸ் முழு ஃபிட்னெஸுடன் இருக்கும்போது, அவரை ஆடவைக்காமல் பென்ச்சில் உட்கார வைத்தது எனக்கு ஆச்சரியமளித்தது. உலகத்தரம் வாய்ந்த ஆல்ரவுண்டர் கம்மின்ஸ். 2-3 போட்டிகள் சரியாக அமையவில்லை என்பதற்காக மேட்ச் வின்னர்களை உட்கார வைப்பீர்களா? கம்மின்ஸ் மாதிரியான மேட்ச் வின்னர்கள் தொடர்ச்சியாக 3 போட்டிகளை ஜெயித்தும் கொடுப்பார்கள் என்று யுவராஜ் சிங் கேகேஆர் அணியை விளாசியுள்ளார்.