Asianet News TamilAsianet News Tamil

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக கண்டிப்பாக இவரை நியமிக்கலாம்..! யுவராஜ் சிங் அதிரடி

இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக யாரை நியமிக்கலாம் என யுவராஜ் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

yuvraj singh names next test captain of team india
Author
Chennai, First Published Jan 17, 2022, 7:40 PM IST

இந்திய டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகிய விராட் கோலி, ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பின்பு, டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்தும் விலகிவிட்டார்.

தோனிக்கு பிறகு 2014ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன்சியை ஏற்ற விராட் கோலி, 68 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, 40 வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்தது. இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுக்கொடுத்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் விராட் கோலி.

விராட் கோலி டெஸ்ட் அணியின் கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய நிலையில், அடுத்த கேப்டனாக யார் நியமிக்கப்படுவார் என்பதுதான் பெரும் கேள்வியாக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக ரோஹித் சர்மா தான் நியமிக்கப்பட்டிருந்தார். அவர் காயத்தால் ஆடாத காரணத்தால் தான் ராகுல் துணை கேப்டனாக செயல்பட்டார். 

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மாவே, டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புதான் அதிகமுள்ளது.

ஆனால், 34 வயதாகிவிட்ட ரோஹித் சர்மா இன்னும் 3-4 ஆண்டுகள் மட்டுமே கிரிக்கெட் ஆடுவார் என்பதால், இந்திய அணிக்கு நீண்டகால கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற வகையில், ரிஷப் பண்ட் - கேஎல் ராகுல் ஆகியோரின் பெயர்களை முன்னாள் வீரர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அந்தவகையில், இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் குறித்து பேசிய சுனில் கவாஸ்கர், ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸின் கேப்டனாக நியமிக்கப்பட்ட பின்னர் கூடுதல் பொறுப்புடன் ரோஹித் சர்மா பேட்டிங் ஆடினார். கேப்டன்சி அவரது பொறுப்புணர்வை அதிகப்படுத்தியதுடன் பேட்டிங்கையும் மேம்படுத்தியது. அதன்பின்னர் 30, 40, 50களை, 100, 150, 200 என பெரிய இன்னிங்ஸ்களாக மாற்றினார். எனவே அதேபோலவே ரிஷப் பண்ட்டிடம் கேப்டன்சியை ஒப்படைத்தால், அது அவரது பேட்டிங் மேம்பட உதவும். எனவே ரிஷப் பண்ட்டை அடுத்த கேப்டனாக நியமிக்கலாம் என்று கவாஸ்கர் கருத்து கூறியிருந்தார்.

அதை வழிமொழிந்துள்ள யுவராஜ் சிங், கண்டிப்பாக ரிஷப்பையே கேப்டனாக நியமிக்கலாம். விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட், ஸ்டம்ப்புக்கு பின்னால் இருந்து ஆட்டத்தை சிறப்பாக ரீட் செய்வார் என்று யுவராஜ் சிங் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios