Asianet News TamilAsianet News Tamil

WPL 2023 Auction: இந்தியா, ஆஸி., வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி! இங்கி., ஆல்ரவுண்டருக்கு 2வது அதிகபட்ச தொகை

மகளிர் பிரீமியர் லீக் தொடர் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது. இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட்-ஐ ரூ.3.2 கோடி என்ற 2வது அதிகபட்ச தொகையை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. 
 

wpl 2023 auction more demands for india and australia players and england all rounder nat sciver brunt bids for second highest amount
Author
First Published Feb 13, 2023, 3:51 PM IST

மகளிர் பிரீமியர் லீக் தொடர் இந்த ஆண்டு முதல் தொடங்கப்படுகிறது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடள்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், யுபி வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் முதல் சீசனில் ஆடுகின்றன.

இந்த சீசனுக்கான ஏலம் இன்று மும்பையில் நடந்துவருகிறது. மொத்தம் 409 வீராங்கனைகள் ஏலம் விடப்படுகின்றனர். பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கிய ஏலத்தில் முதல் வீராங்கனையாக இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ஏலம்விடப்பட்டார். அவரை ரூ.3.4 கோடிக்கு ஆர்சிபி அணி வாங்கியது. 

மகளிர் பிரீமியர் லீக் முதல் சீசனுக்கான ஏலத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது. இந்திய டாப் ஆர்டர் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா ரூ.3.4 கோடி என்ற அதிகபட்ச தொகைக்கு ஆர்சிபி அணியால் எடுக்கப்பட்ட நிலையில், இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மாவை ரூ.2.6 கோடி கொடுத்து யுபி வாரியர்ஸ் அணி எடுத்தது. 

WPL 2023 Auction: ஸ்மிரிதி மந்தனாவை அதிகபட்ச தொகைக்கு தட்டிதூக்கிய ஆர்சிபி! ஹர்மன்ப்ரீத் கௌரை வாங்கியது மும்பை

ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா சிங்கை ஆர்சிபி அணி ரூ.1.5 கோடிக்கு எடுத்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னெரை ரூ.3.2 கோடி கொடுத்து குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி வாங்கியது. 

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பெத் மூனியை ரூ.2 கோடிக்கு குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஆஸ்திரேலிய வீராங்கனை டாலியா மெக்ராத்தை ரூ.1.4 கோடிக்கு யுபி வாரியர்ஸ் அணி வாங்கியது. 

WPL 2023 Auction Live: இந்தியா, ஆஸி., வீராங்கனைகளுக்கு அதிக கிராக்கி

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் நாட் ஸ்கைவர் பிரண்ட்-ஐ ரூ.3.2 கோடி என்ற அதிகமான தொகைக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. இந்த ஏலத்தில் இதுவரை இதுதான் 2வது அதிகபட்ச தொகை ஆகும்.  

இந்திய வீராங்கனைகள் ஜெமிமா ரோட்ரிக்ஸை ரூ.2.2 கோடிக்கும், ஷஃபாலி வெர்மாவை ரூ.2 கோடிக்கும் டெல்லி கேபிடள்ஸ் அணி வாங்கியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios