வங்கதேசத்தின் தந்தையாக போற்றப்படும் ஷேக் முஜீபுர் ரஹ்மானின் 100வது பிறந்தநாளையொட்டி, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மார்ச் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் ஆகிய அணிகளுக்கு இடையே 2 டி20 போட்டிகளை நடத்துகிறது. 

இந்த போட்டிகளுக்கான ஆசியா லெவன் மற்றும் உலக லெவன் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆசியா லெவன் அணியில் விராட் கோலி, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், ஷமி, குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

ஆசியா லெவன் அணி:

கேஎல் ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, தமீம் இக்பால், லிட்டன் தாஸ், ரிஷப் பண்ட், முஷ்ஃபிகுர் ரஹீம், திசாரா பெரேரா, ரஷீத் கான், லாமிசன்னே, முஷ்தாஃபிசுர் ரஹ்மான், மலிங்கா, முஜீபுர் ரஹ்மான், முகமது ஷமி, குல்தீப் யாதவ். 

ஃபாஃப் டுப்ளெசிஸ் தலைமையிலான உலக லெவன் அணியில் கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜானி பேர்ஸ்டோ, நிகோலஸ் பூரான், பொல்லார்டு, லுங்கி இங்கிடி, கோட்ரெல், அடில் ரஷீத் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

உலக லெவன் அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ்(கேப்டன்), கிறிஸ் கெய்ல், அலெக்ஸ் ஹேல்ஸ், நிகோலஸ் பூரான், பிரண்டன் டெய்லர், பொல்லார்டு, அடில் ரஷீத், ஷெல்டான் கோட்ரெல், லுங்கி இங்கிடி, ஆண்ட்ரூ டை, மெக்லனகன்.