உலகக் கோப்பை தொடரில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சனுக்கு வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் கேரளாவைச் சேர்ந்தவர் சஞ்சு சாம்சன். கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம் பெற்று விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் இடம் பெற வில்லை. இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இடம் பெறாமல் புறக்கணிக்கப்பட்டு வந்தார்.
நடராஜன் கிரிக்கெட் மைதானம்: திறந்து வைத்த தினேஷ் கார்த்திக்; யோகி பாபு, புகழ் பங்கேற்பு!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து கடைசி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு போராடினார். கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 5ஆவது 5ஆவது இடம் பிடித்து ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து வரும் ஜூலையில் வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
தேர்வுக்குழு தேர்வாளர் பதவிக்கு ஜூன் 30 கடைசி தேதி; அஜய் ராத்ரா மீண்டும் நியமிக்கப்பட வாய்ப்பு!
இந்த தொடரின் மூலமாக சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம் பெற தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மேலும், இந்திய அணியில் இருந்து சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி வெற்றி பெற்ற நெல்லை ராயல் கிங்ஸ்; புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடம்!