Ind vs Aus 3rd test: சாதிக்கப்போகும் அஸ்வின்? ஃபார்ம் இல்லாமல் தடுமாறும் கோலி! 3வது டெஸ்டில் என்ன நடக்கும்?
இந்தூரில் இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் பல்வேறு சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
இந்தூரில் இன்று தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திர அஸ்வின் பல்வேறு சாதனைகளை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
குறிப்பாக பார்டர் கவாஸ்கர் கோப்பைப் போட்டியில் அனில் கும்ப்ளே, கபில் தேவ் சாதனையை காலி செய்யும் முனைப்பில் அஸ்வின் உள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இதுவரை நடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வென்று2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது
3வது டெஸ்ட் போட்டி மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பல்வேறு சாதனைகளை படைக்கக் காத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 111 விக்கெட்டுகளை வீழ்த்தி அனில் கும்ப்ளே சாதனை வைத்துள்ளார், அந்த சாதனையை சமன் செய்ய அஸ்வினுக்கு இன்னும் 8விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இந்த சாதனையை இந்த டெஸ்டில் அஸ்வின் சமன் செய்யலாம்.
அதேபோல அனில் கும்ப்ளே சாதனையை சமன் செய்ய ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லேயனுக்கு 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான் கபில் தேவின் 687 விக்கெட்டுகளை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 2 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படுகிறது.
அதேபோல, முன்னாள் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் கிரிக்கெட்டில் 4ஆயிரம் ரன்களை எட்ட 77 ரன்கள் தேவைப்படுகிறது.
கேப்டன் ரோஹித் சர்மா, உள்நாட்டில் டெஸ்ட் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை எட்ட இன்னும் 57 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பதவி ஏற்று 3ஆயிரம் ரன்களை எட்ட ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 80 ரன்கள் தேவைப்படுகிறது
இந்தூர் டெஸ்டுக்காக பயிற்சியாளராக மாறிய விராட் கோலி: வைரலாகும் வீடியோ!
கடந்த 2008ம் ஆண்டில் இருந்து உள்நாட்டில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலியின் ஆதிக்கமே இருந்து வருகிறது. 199 போட்டிகளில் ஆடிய கோலி, 221 இன்னிங்ஸ்களில் 10,829 ரன்கள் சேர்த்துல்ளார். இதில் 34 சதங்கள், 51 அரைசதங்கள் அடங்கும்
2020ம் ஆண்டிலிருந்து டெஸ்ட் போட்டியில் பெரியஸ்கோர் அடிக்க முடியாமல் கோலி திணறி வருகிறார். கடந்த கால சாதனைகள் அவருக்கு துணை புரியும். 2020ம் ஆண்டில் கோலி 3போட்டிகளில் 116 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். 2021ல் 11 போட்டிகளில் 536 ரன்கள், இதில் 4 அரைசதங்கள் அடங்கும். 2022ல் 6 போட்டிகளில் 265 ரன்கள் மட்டுமே சேர்த்த கோலியின் கணக்கில் ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும்
டெல்லியில் நடந்த 2வது டெஸ்டிலும் கோலி 44, 20 ரன்களுடன் நடையைக் கட்டினார். ஆதலால், கடந்த 2020ம் ஆண்டிலிருந்து பேட்டிங்கில் திணறும் கோலி இந்த முறை சாதிப்பாரா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற வாய்ப்புகள் நெருங்கி வரும் நிலையில் கோலியின் ஃபார்ம் கவலையாக இருக்கிறது.இந்த டெஸ்ட் தொடரில் இதுவரை கோலி 3 இன்னிங்ஸில் வெறும் 76 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.