இந்தூர் டெஸ்டுக்காக பயிற்சியாளராக மாறிய விராட் கோலி: வைரலாகும் வீடியோ!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு விராட் கோலி கேட்ச் பயிற்சி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தூர் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்தப் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களுக்கு தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னதாக நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இந்தூரில் கிங் இந்தியா தான், டாப் ஸ்கோர் 557: ஆஸ்திரேலியா மட்டும் ஜெயிச்சா வரலாற்று சாதனை தான்!
இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2 போட்டியில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். ஏற்கனவே 2 போட்டிகளில் தோற்ற ஆஸ்திரேலியா இந்தப் போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதெல்லாம் ஒரு சாதனையா? இத பத்தி யார் பேசுவா? விராட் கோலிக்கு பதிலளித்த மாட்டி பனேசர்!
ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியிலிருந்து பேட் கம்மின்ஸ், டேவிட் வார்னர், மேட் ரென்ஷா, ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹசல்வுட், டோட் முர்பி ஆகியோர் விலகியுள்ளனர். பேட் கம்மின்ஸுக்குப் பதிலாக ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். இந்த நிலையில், இந்திய வீரர்களுக்கு விராட் கோலி கேட்ச் பயிற்சி அளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக இந்தூரில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று இந்தியா வந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூர் டெஸ்ட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 557 ரன்கள் ஆகும். தனி நபர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 243 ஆகும்.
7ஆவது முறையாக சிறந்த வீரருக்கான பிஃபா விருது வென்று லியோனல் மெஸ்ஸி சாதனை!