இந்தூரில் கிங் இந்தியா தான், டாப் ஸ்கோர் 557: ஆஸ்திரேலியா மட்டும் ஜெயிச்சா வரலாற்று சாதனை தான்!
இந்தூரில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. நாளை நடக்க உள்ள டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா ஜெயித்தால் இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படும்.
ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட்
இதையடுத்து, நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி நாளை இந்தூர் மைதானத்தில் நடக்கிறது.
இந்தூரில் இந்தியா சாதனை
இதுவரையில் இந்தூரில் நடந்த 2 டெஸ்ட் போட்டியில் இந்தியா தான் வெற்றி பெற்றுள்ளது. 2019 ஆம் ஆண்டு இந்தியா வந்த வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டி இந்தூரில் நடந்தது. இதில், இந்தியா முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 493 எடுத்து டிக்ளேர் செய்தது.
இந்தூரில் மாயங்க அகர்வால் 243 ரன்கள்
இந்தப் போட்டியில் மாயங்க் அகர்வால் அதிகபட்சமாக 243 ரன்கள் எடுத்தார். இதில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியா வந்த நியூசிலாந்து அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவது போட்டி இந்தூரில் நடந்தது.
இந்தூர் டெஸ்ட் போட்டி
இதில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்பிற்கு 557 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி அதிகபட்சமாக 211 ரன்களும், அஜின்க்யா ரகானே 188 ரன்களும் எடுத்தனர். 2ஆவது இன்னிங்ஸில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில், சட்டீஸ்வர் புஜாரா 101 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இந்தியா 321 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
இந்தியா - ஆஸ்திரேலியா
இதுவரையில் வங்கதேச அணி மற்றும் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு தோல்வியடைந்து திரும்பி சென்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியா வந்த ஆஸ்திரேலியா இந்தூரில் நடக்கும் போட்டியில் வெற்றி வாகை சூடுமா? ஒருவேளை இந்தூரில் நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால், இந்தூரில் வெற்றி பெறும் முதல் வெளிநாட்டு அணி என்ற சாதனையை படைக்கும். அதோடு இந்தியாவின் சாதனையும் முறியடிக்கப்படும்.
இந்தூர் 3ஆவது டெஸ்ட்
அப்படி எதும் நடக்காமல் இந்தியா இந்தப் போட்டியில் வெற்றி பெற்று 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்தியா கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தூரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 557/5 (நியூசிலாந்துக்கு எதிராக).
இந்தியா - ஆஸ்திரேலியா 3ஆவது டெஸ்ட் போட்டி
குறைந்தபட்ச ஸ்கோர் 150/10 (இந்தியாவுக்கு எதிராக வங்கதேசதம் எடுத்த ரன்). இந்தூரில் நடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு போட்டியில் 2ஆவது பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தூர் 3ஆவது டெஸ்ட்
முதல் இன்னிங்ஸில் ஆவரேஸ் ஸ்கோர் 353, 2ஆவது இன்னிங்ஸில் ஆவரேஜ் ஸ்கோர் 396, 3ஆவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 214, 4ஆவது இன்னிங்ஸ் ஆவரேஜ் ஸ்கோர் 153 ஆகும்.