Asianet News TamilAsianet News Tamil

World Cup Opening Ceremony: கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் யாருக்கெல்லாம் அனுமதி?

உலகக் கோப்பை தொடக்க விழா வரும் 4 ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டிக்கு டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Who is allowed in Cricket World Cup opening ceremony? rsk
Author
First Published Oct 2, 2023, 10:43 AM IST | Last Updated Oct 2, 2023, 10:43 AM IST

இந்தியா நடத்தும் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடர் வரும் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக 4ஆம் தேதியே கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழா நடக்க இருக்கிறது. அக்டோபர் 4 ஆம் தேதி கேப்டன்ஸ் டே என்றும் அழைக்கப்படுகிறது. கேப்டன்ஸ் டே அன்று 10 அணிகளின் கேப்டன்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

CWC 2023: ரன்வீர் சிங் முதல் அரிஜித் சிங் வரையில் உலகக் கோப்பை தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்!

இந்த நிலையில், கிரிக்கெட் உலகக் கோப்பை தொடக்க விழாவில் சங்கர் மகாதேவன், ஷ்ரேயா கோஷல், அரிஜித் சிங், ஆஷா போஸ்லே ஆகியோரது இசை நிகழ்ச்சியும், ரன்வீர் சிங், தமன்னா ஆகியோரது கலை நிகழ்ச்சியும் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதற்காக அகமதாபாத் மைதானம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் லேசர் ஷோ மற்றும் வானவேடிக்கைகள் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளின் கேப்டன்களும் கலந்து கொள்வார்கள். ரசிகர்களைப் பொறுத்தவரை, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து தொடக்கப் போட்டிக்கு டிக்கெட் வாங்கியவர்கள் விழாவில் கலந்து கொள்ளலாம்.

1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 1 வெண்கலம்; குண்டு எறிதலில் இந்தியாவிற்கு தங்கம்!

ஆஷா போஸ்லே தனது அழகான குரலால் பார்வையாளர்களை மயக்குவார். ஷ்ரேயா கோஷல், ஷங்கர் மகாதேவன் மற்றும் அரிஜித் சிங் ஆகியோரும் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளனர். ஐசிசியின் உலகக் கோப்பை ஆந்தம் பாடல் வீடியோவில் இடம் பெற்ற ரன்வீர் சிங் உள்ளிட்ட சில பாலிவுட் மற்றும் டோலிவுட் பிரபலங்களும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

Cricket World Cup 2023: காயம் காரணமாக டிம் சவுதி விலகல்? ஏற்கனவே கேன் வில்லியம்சனும் இல்லை!

கிரிக்கெட் உலகக் கோப்பையில் கலந்து கொள்ளும் பிரபலங்கள்:

  • ஆஷா போஸ்லே
  • ஷ்ரேயா கோஷல்
  • ஷங்கர் மகாதேவன்
  • அரிஜித் சிங்
  • ரன்வீர் சிங்
  • தமன்னா

CWC 2023: மிஷன் உலகக் கோப்பை ஆரம்பம்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த கோலி – ரவிச்சந்திரன் அஸ்வின்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios