AUS vs SL: உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி இருக்கிறது? இன்னும் எத்தனை வெற்றி தேவை?

உலகக் கோப்பையில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா இந்த 2023 உலகக் கோப்பையில் விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.

What are Australia semi-final chances at the Cricket World Cup 2023? rsk

இந்தியாவில் நடந்து வரும் 13 ஆவது கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. இதன் மூலமாக புள்ளிப்பட்டியலில் 10ஆவது அணியாக இடம் பெற்றிருக்கிறது. இதற்கு முன்னதாக 5 முறை சாம்பியனாக பலம் வாய்ந்த அணியாக திகழும் ஆஸ்திரேலியா முதல் வெற்றிக்காக போராடி வருகிறது. ஆஸ்திரேலியா இன்றைய போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது 24 கேரட் கோல்டு ஐ போனை காணவில்லை – நடிகை காவல் நிலையத்தில் புகார்!

ஒவ்வொரு அணியும் விளையாடும் 9 போட்டிகளில் விளையாட வேண்டும். மேலும், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும். இந்தப் போட்டியுடன் இன்னும் 7 போட்டிகளில் ஆஸ்திரேலியா விளையாட இருக்கிறது. இதில், இலங்கை, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளுடன் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது. ஆனால், ஆப்கானிஸ்தான், நேற்று நடந்த போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது.

AFG vs ENG:ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சி: சோகத்திலும் வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

அதன் பிறகு பலமான அணிகள் என்று பார்த்தால் பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய அணிகள் தான். இதில் எப்படியும் 2 போட்டிகளில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு 12 புள்ளிகள் கிடைக்கும். எனினும் நியூசிலாந்து விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் 3 போட்டியில் ஒன்றில் தோல்வியை தழுவியது. இதே போன்று தான் இங்கிலாந்தும் விளையாடிய 3 போட்டிகளில் ஒன்றில் தோல்வியை தழுவியது.

எப்படியும் ஆஸ்திரேலியா குறைந்தது 5 அல்லது 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மேலும், இது நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான், இந்தியா ஆகிய அணிகளைப் பொறுத்தும் அமையும். மற்ற அணிகள் அதிக புள்ளிகள் பெற்றுவிட்டால் ஆஸ்திரேலியா வெளியேறிவிடும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios