உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. 

இரு அணிகளுமே முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றுள்ளன. தலா ஒரு வெற்றியுடன் இருக்கும் இரு அணிகளுமே இரண்டாவது வெற்றியை பதிவு செய்யும் நோக்கில் களம் காண்கின்றன. 

நாட்டிங்காமில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர், ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு தொடக்க வீரர் எவின் லெவிஸ் திரும்பியுள்ளார். அதனால் ஷாய் ஹோப் மூன்றாம் வரிசையில் இறங்குகிறார். எவின் லெவிஸ் திரும்பியதால் டேரன் பிராவோ நீக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் இல்லை. 

ஆஸ்திரேலிய அணி:

வார்னர், ஃபின்ச்(கேப்டன்), உஸ்மான் கவாஜா, ஸ்மித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், அலெக்ஸ் கேரி(விக்கெட் கீப்பர்), நாதன் குல்ட்டர்நைல், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஸாம்பா. 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கெய்ல், லெவிஸ், ஷாய் ஹோப், பூரான், ஹெட்மயர், ஆண்ட்ரே ரசல், ஹோல்டர், பிராத்வெயிட், நர்ஸ், கோட்ரெல், ஒஷேன் தாமஸ்.