Asianet News TamilAsianet News Tamil

தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய யுனிவர்ஸ் பாஸ் கிறிஸ் கெயில்!

வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

West Indies Player Universe Boss Chris Gayle Celebrates new year in his own style
Author
First Published Jan 2, 2023, 12:41 PM IST

கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம் பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தவர் கிறிஸ் கெயில். ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த கெயில், புனே அணிக்கு எதிராக 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்தார். டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையை இவர் படைத்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் 14000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 1000 சிக்சர்களுக்கு மேல் அடித்துள்ளார்.

ஓய்வு தேவை என்பதால், ஐபிஎல்லில் ரிஷப் பண்ட் பங்கேற்பதில் சிக்கல்?

கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் 16 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியின் மூலம் டெஸ்டில் அறிமுகமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியே கிறிஸ் கெயிலுக்கு கடைசி டெஸ்ட் போட்டி. இதே போன்று 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமான கெயில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியே கடைசி ஒரு நாள் போட்டி.

2ஆவது டெஸ்ட்: அதிரடி மாற்றத்தோடு களமிறங்கும் பாகிஸ்தான் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!

கடந்த 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த டி20 போட்டியின் மூலம் அறிமுகமான கெயில், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 6 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த போட்டியே கடைசி டி20 போட்டி. பந்து வீச்சில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்துள்ளார். இந்த நிலையில், யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெயில் தனது ஸ்டைலில் புத்தாண்டை கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய கே எல் ராகுல்: வைரலாகும் புகைப்படம்!

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios