Asianet News TamilAsianet News Tamil

2ஆவது டெஸ்ட்: அதிரடி மாற்றத்தோடு களமிறங்கும் பாகிஸ்தான் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

New Zealand won the toss and elected to bat first against Pakistan 2nd test match in Karachi
Author
First Published Jan 2, 2023, 10:43 AM IST

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி 621 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி 311 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய கே எல் ராகுல்: வைரலாகும் புகைப்படம்!

இதைத் தொடர்ந்து 137 ரன்களை வெற்றி இலக்காக கொண்ட நியூசிலாந்து அணி விளையாடியது. ஆனால், போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி முடிக்கப்பட்டது. இதனால், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. நியூசிலாந்து அணி 2ஆவது இன்னிங்ஸில் 61 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் மனைவி, மகளுடன் ரோகித் சர்மா: வைரலாகும் புகைப்படம்!

தற்போது இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் இன்று தொடங்குகிறது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சௌதி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். நியூசிலாந்து அணியில் நீல் வேக்னருக்குப் பதிலாக மேட் ஹென்றி அணியில் இடம் பெற்றுள்ளார். இதே போன்று பாகிஸ்தான் அணியில் நௌமான் அலி, முகமது வாசிம் ஜூனியர் ஆகியோருப் பதிலாக நசீம் ஷா மற்றும் ஹாசன் அலி ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை தொடருக்கு முன்னதாக குடும்பத்தோடு சுற்றுலா சென்ற ரோகித் சர்மா!

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், இமாம் உல் ஹக், ஷான் மசூத், பாபர் அசாம் (கேப்டன்), சௌத் ஷகீல், சர்ஃபராஸ் அகமது (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், நசீம் ஷா, ஹாசன் அலி, அப்ரார் அகமது, மிர் ஹம்ஸா.

நியூசிலாந்து அணி:

டாம் லேதம், டெவான் கான்வே, கேன் வில்லியம்சன், ஹென்ரி நிகோல்ஸ், டேரைல் மிட்செல், டாம் பிளண்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல், டிம் சௌதி (கேப்டன்), இஷ் சோதி, மேட் ஹென்றி, அஜாஸ் படேல்.

IND vs SL:ரோஹித், கோலி இல்லாத இந்திய அணி.. முதல் டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்

Follow Us:
Download App:
  • android
  • ios