இலங்கைக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று 2-1 என தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி. 

இலங்கை அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், 2வது போட்டியில் இலங்கை அணியும் வெற்றி பெற்ற நிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று நடந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆண்டிகுவாவில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் குணதிலகா, நிசாங்கா மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய டிக்வெல்லா ஆகிய மூவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, சண்டிமாலும் பண்டாராவும் சிறப்பாக ஆடினர். அபாரமாக ஆடி அரைசதம் அடித்த சண்டிமால் 56 ரன்களும், பண்டாரா 44 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 131 ரன்கள் அடித்தது இலங்கை அணி.

132 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, சிம்மன்ஸ், லூயிஸ், கெய்ல், பூரான், ஹோல்டர் என யாருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், இலக்கு எளிதானது என்பதால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய ஃபேபியன் ஆலன் 6 பந்தில் 3 சிக்ஸர்களை விளாசி விரைவில் 21 ரன்களை சேர்த்து 19வது ஓவரிலேயே இலக்கை எட்ட உதவினார்.

இந்த போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 2-1 என தொடரை வென்றது. அடுத்ததாக இரு அணிகளுக்கும் இடையே ஒருநாள் தொடரும், அடுத்து டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளன.