Asianet News TamilAsianet News Tamil

#WIvsAUS சீட்டுக்கட்டாய் சரிந்த ஆஸ்திரேலிய பேட்டிங் ஆர்டர்..! முதல் டி20யில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 

west indies beat australia by 18 runs in first t20
Author
St Lucia, First Published Jul 10, 2021, 3:18 PM IST

ஆஸ்திரேலிய அணி 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி ஜூலை 10ம் தேதி(இன்று) காலை 5 மணிக்கு தொடங்கி நடந்தது.

அந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் டக் அவுட்டாக, கெய்ல் 4 ரன்னிலும் ஆட்டமிழக்க, சிம்மன்ஸ் 27 ரன்னிலும் ஹெட்மயர் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.

பின்வரிசையில் அடித்து ஆடிய ஆண்ட்ரே ரசல் 28 பந்தில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 145 ரன்கள் அடித்தது.

146 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபின்ச் 4 ரன்னில் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான மேத்யூ வேட் அடித்து ஆடி 14 பந்தில் 33 ரன்கள் விளாசினார். அதன்பின்னர் ஜோஷ் ஃபிலிப் ஒரு ரன்னிலும், ஹென்ரிக்ஸ் 16 ரன்னிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த மிட்செல் மார்ஷ், 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.

மிட்செல் மார்ஷ் ஆட்டமிழந்தபோது, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் 12.3 ஓவரில் 117 ரன்கள். மிட்செல் மார்ஷ் 6வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எஞ்சிய 45 பந்தில் ஆஸி.,யின் வெற்றிக்கு வெறும் 29 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பவுலர் ஒபெட் மெக்காயின் பந்தில் அஷ்டன் அகர்(1), மிட்செல் ஸ்டார்க்(3) மற்றும் ஹேசில்வுட்(0) ஆட்டமிழக்க, 127 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தது ஆஸ்திரேலிய அணி.

இதையடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று 1-0 என டி20 தொடரில் முன்னிலை வகிக்கிறது. மெக்காய் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios