ஒருநாள் உலக கோப்பை தகுதிச்சுற்றுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
ஒருநாள் உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாத வெஸ்ட் இண்டீஸ் அணி, தகுதிச்சுற்றுக்கான அணியை அறிவித்துள்ளது.
ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதிபெற்ற நிலையில், முன்னணி அணிகளில் ஒன்றான வெஸ்ட் இண்டீஸ் தகுதிச்சுற்றில் ஆடவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
1975 மற்று 1979ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக 2 ஒருநாள் உலக கோப்பைகளை வென்றதுடன், டி20 உலக கோப்பையையும் 2 முறை வென்று உலகின் முன்னணி அணிகளில் ஒன்றாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் அணி, உலக கோப்பைக்கு நேரடியாக தகுதிபெறாததே பெரும் பின்னடைவுதான்.
IPL 2023: முக்கியமான போட்டியில் செம கெத்தான MI vs GT பலப்பரீட்சை..! இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவன்
இந்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் உலக கோப்பைக்கு தகுதிபெற வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதிச்சுற்றில் ஆடவேண்டியுள்ள நிலையில், தகுதிச்சுற்றுக்கான ஷேய் ஹோப் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
IPL 2023: நீ நல்ல ஃபினிஷர் ஆகணும்னா இதை மட்டும் செய்..! ரிங்கு சிங்கிற்கு தல தோனியின் தரமான அட்வைஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷேய் ஹோப் (கேப்டன்), ரோவ்மன் பவல், ஷமர் ப்ரூக்ஸ், யானிக் காரியா, கீஸி கார்ட்டி, ரோஸ்டான் சேஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், அல்ஸாரி ஜோசஃப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, கீமோ பால், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெஃபெர்டு.