சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதும் ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில் எந்த அணி வெல்லும் என்று வாசிம் ஜாஃபர் வெளிப்படையாக கூறியும், எந்த அணியை சொல்கிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

ஐபிஎல் 14வது சீசனின் ஃபைனலில், ஏற்கனவே 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கேவும், 2 முறை கோப்பையை வென்றுள்ள கேகேஆரும் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

துபாயில் இன்று நடக்கும் ஃபைனலில் 3வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் கேகேஆரும், 4வது முறையாக கோப்பையை தூக்கும் முனைப்பில் சிஎஸ்கேவும் மோதுகின்றன.

இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

அந்தவகையில், இதுகுறித்து டுவீட் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், உலக கோப்பை வின்னிங் கேப்டன் மற்றும் நியூசிலாந்து பயிற்சியாளரை பெற்றிருக்கும் அணி தான் கோப்பையை வெல்லும் என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…

இன்றைய ஃபைனலில் மோதும் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் ஆகிய 2 அணிகளின் கேப்டன்களுமே உலக கோப்பையை வென்ற கேப்டன்கள் தான். மேலும் 2 அணிகளின் பயிற்சியாளர்களுமே நியூசிலாந்தை சேர்ந்தவர்கள் தான். சிஎஸ்கே கேப்டன் தோனி 2011லும், கேகேஆர் கேப்டன் ஒயின் மோர்கன் 2019லும் ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றவர்கள். சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் மற்றும் கேகேஆர் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஆகிய இருவருமே நியூசிலாந்தை சேர்ந்தவர்கள்.

இதையும் படிங்க - IPL 2021 ஃபைனலில் சிஎஸ்கே - கேகேஆர் பலப்பரீட்சை..! எந்த அணி கோப்பையை வெல்லும்..? ஆகாஷ் சோப்ரா அதிரடி ஆருடம்

ஃபைனலில் மோதும் இந்த 2 அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லமுடியும் என்பதை நாசூக்காக கூறியுள்ளார் வாசிம் ஜாஃபர்.