Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பையில் காத்திருக்கும் செம சர்ப்ரைஸ்..! இளம் வீரருக்கு ஓபனிங் பேட்டிங்கை விட்டுக்கொடுக்கும் ரோஹித்

டி20 உலக கோப்பையில் ரோஹித் சர்மா 4ம் வரிசையில் பேட்டிங் ஆடவேண்டும் என்று, தொடக்க வீரராக இளம் வீரரை பரிந்துரைத்துள்ளார் வாசிம் ஜாஃபர்.
 

wasim jaffer opines captain rohit sharma should bat at number 4 and give chance rishabh pant to open in t20 world cup
Author
First Published Sep 13, 2022, 10:13 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 வீரர்கள் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது ஏன்..? தேர்வாளர் விளக்கம்

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

டி20 கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் சொதப்பிவரும் நிலையில், சஞ்சு சாம்சனை எடுக்காமல் அவரை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுத்ததே விமர்சனத்துக்குள்ளானது. டாப் 4 பேட்டிங் ஆர்டருக்குள் தான் ரிஷப் பண்ட்டை இறக்கவேண்டும். அதன்பின்னர் இறக்குவதென்றால் அவர் சரிப்பட்டுவரமாட்டார். ஏனெனில் ஃபினிஷிங் ரோலை செய்ய தினேஷ் கார்த்திக் இருக்கிறார். எனவே ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஆகிய 2 விக்கெட் கீப்பர்களில் ஒருவர்தான் ஆடமுடியும்.

டி20 கிரிக்கெட்டில் சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டை அணியில் எடுத்தது விமர்சனத்துக்குள்ளாகிவரும் நிலையில், அவரை மிடில் ஆர்டரில் இறக்காமல் ஓபனிங்கில் இறக்கலாம் என்று வாசிம் ஜாஃபர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க - முதல்ல அவரை ஆடவிடுங்க; அதுக்கு அப்புறம் விமர்சிங்க! T20 WC இந்திய அணியில் இடம்பிடித்த வீரருக்கு கவாஸ்கர் ஆதரவு

இதுகுறித்து கருத்து கூறியுள்ள வாசிம் ஜாஃபர், டி20 கிரிக்கெட்டில் ஓபனிங்கில் ரிஷப் பண்ட் இன்னும் சிறப்பாக ஆடுவார் என்று நம்புகிறேன். ரோஹித்தை தோனி ஓபனிங்கில் இறக்கிவிட்டார். அதன்பின்னர் நடந்ததெல்லாம் வரலாறு. அதேபோல, ரோஹித் ரிஷப் பண்ட்டை ஓபனிங்கில் இறக்கிவிட்டு அவர் 4ம் வரிசையில் ஆடலாம். ராகுல் - ரிஷப் பண்ட் ஓபனிங், 3ம் வரிசையில் கோலி, 4ம் வரிசையில் ரோஹித், 5ம் வரிசையில் சூர்யகுமார். இதுதான் எனது டாப் 5 பேட்டிங் ஆர்டர் என்று வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios