Asianet News TamilAsianet News Tamil

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது ஏன்..? தேர்வாளர் விளக்கம்

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனை எடுக்காதது ஏன் என தேர்வாளர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
 

bcci selector explains why sanju samson not picked in india squad for t20 world cup
Author
First Published Sep 13, 2022, 6:24 PM IST

டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி20 உலக கோப்பைக்கான ரோஹித் சர்மா தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 4 வீரர்கள் ஸ்டாண்ட்பை வீரர்களாக எடுக்கப்பட்டுள்ளனர்.

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்.

ஸ்டாண்ட்பை  வீரர்கள் - முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி எப்படி இருக்கு..? சுனில் கவாஸ்கர் கருத்து

இந்திய மெயின் அணியில் முகமது ஷமி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் எடுக்கப்படாததை முன்னாள் வீரர்கள் பலர் விமர்சித்துவருகின்றனர்.

மேலும் தொடர்ச்சியாக சொதப்பிவரும் ரிஷப் பண்ட்டை எல்லாம் அணியில் எடுக்கின்றனர். ஆனால் போதுமான மற்றும் தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்காமலேயே சஞ்சு சாம்சன் புறக்கணிக்கப்படுவது முன்னாள் வீரர்கள், ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ரசிகர்கள் டுவிட்டரில் தங்கள் அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தினர்.

பேக்ஃபூட்டில் அருமையாக ஆடுவார் சாம்சன். புல் ஷாட், கட் ஷாட், ஸ்டிரைட்டில் பவுலர்களுக்கு தலைமேல் தூக்கியடிப்பது என அனைத்துவிதமான ஷாட்டுகளையும் அருமையாக ஆடுவார். அதை நாம் ஐபிஎல்லிலேயே பார்த்திருக்கிறோம். ஆஸ்திரேலியாவில் அவரது ஷாட்டுகள் பெரியளவில் பயன்படும் என்று கேப்டன் ரோஹித் சர்மா ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் அவரை டி20 உலக கோப்பைக்கான அணியில் எடுக்கவில்லை.

இதையும் படிங்க - அவரை கண்டிப்பா இந்திய அணியில் எடுத்திருக்கணும்! உலக கோப்பை வின்னிங் டீமை தேர்வுசெய்த முன்னாள் தேர்வாளர் அதிரடி

சஞ்சு சாம்சனை எடுக்காதது சர்ச்சையாகியுள்ள நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேர்வாளர் ஒருவர், சஞ்சு சாம்சன் மிகச்சிறந்த திறமைசாலி. உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்திய அணியில் டாப் 5 பேட்ஸ்மேன்கள் உறுதி. திடமாக 5 இடங்களை வீரர்கள் பிடித்துவிட்டனர். அதன்பின்னர் இறங்கும் பேட்ஸ்மேன் பவுலிங் வீச தெரிந்தவராக இருந்தால் தான், தேவைப்படும்போது அவரை ஒன்றிரண்டு ஓவர்கள் வீசவைக்க முடியும். அந்த ஆப்சனை தீபக் ஹூடா கொடுப்பார். அண்மையில் தீபக் ஹூடா சிறப்பாக செயல்பட்டிருப்பதால் அவரை எடுத்ததாக அந்த தேர்வாளர் கூறியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios