உத்தரகண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக, இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். 

வாசிம் ஜாஃபர் இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் தொடக்க வீரர். 2000ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் வாசிம் ஜாஃபர். இந்திய அணிக்காக பெரியளவில் ஆடவில்லையென்றாலும், மிகச்சிறந்த முதல் தர கிரிக்கெட்டராக திகழ்ந்தார் வாசிம் ஜாஃபர். 

20 ஆண்டுகளுக்கும் மேலாக முதல் தர கிரிக்கெட்டில் ஆடிய வாசிம் ஜாஃபர், 256 முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 19,211 ரன்களை குவித்து, முதல் தர கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக திகழ்கிறார் வாசிம் ஜாஃபர். 

1996லிருந்து 2015 வரை ரஞ்சி தொடரில் மும்பை அணிக்காக ஆடிய வாசிம் ஜாஃபர், அதன்பின்னர் விதர்பா அணிக்காக ஆடினார். 2019-20ல் நடந்த ரஞ்சி தொடருடன் ஓய்வு பெற்றார் வாசிம் ஜாஃபர்.

இந்நிலையில், உத்தரகண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக வாசிம் ஜாஃபர் நியமிக்கப்பட்டுள்ளார். மிகச்சிறந்த பேட்ஸ்மேனும் நல்ல அனுபவம் கொண்டவருமான  வாசிம் ஜாஃபர், உத்தரகண்ட் மாநில கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ஓராண்டுக்கு நியமிக்கப்பட்டிருப்பதை அவரே உறுதி செய்துள்ளார். 

Also Read - இந்திய ஸ்பின்னர் தேர்வு செய்த ஆல்டைம் உலக டெஸ்ட் லெவன்..! வெறும் 3 இந்திய வீரர்களுக்குத்தான் அணியில் இடம்

24 ஆண்டுகள் உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடி, அதிக ரன்களை குவித்து சாதனை படைத்த வாசிம் ஜாஃபர், தனது கிரிக்கெட் கெரியரில் அடுத்த அத்தியாயத்தை தொடங்குகிறார்.