Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல்லைவிட அந்த ஒரு விஷயத்தில் பி.எஸ்.எல் தான் பெஸ்ட்..! வாசிம் அக்ரம் அதிரடி

ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் ஃபாஸ்ட் பவுலிங் தரமாக இருப்பதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 
 

wasim akram says that psl has quality bowling attack than ipl
Author
Pakistan, First Published Jun 7, 2020, 10:44 PM IST

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) 2008ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. உலகின் பணக்கார டி20 லீக் தொடர் ஐபிஎல் தான். அதிகமான பணம் புழங்கும் ஐபிஎல்லில், 2 மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பதால், வெளிநாட்டு வீரர்களும் ஐபிஎல்லில் ஆடத்தான் ஆர்வம் காட்டுகின்றனர். 

இதுவரை 12 ஐபிஎல் சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளன. ஐபிஎல்லில் பாகிஸ்தான் வீரர்களை தவிர மற்ற அனைத்து நாட்டு வீரர்களும் ஆடுகின்றனர். ஐபிஎல் தொடங்கப்பட்ட முதல் சில ஆண்டுகள் பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல்லில் ஆடினார்கள். ஆனால் அதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே நல்லுறவு இல்லாததால், பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவில் ஆட அனுமதிக்கப்படுவதில்லை. 

அதனால் பாகிஸ்தானிலேயே டி20 லீக் தொடங்கப்பட்டுவிட்டது. பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் 5 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாகிஸ்தான் சூப்பர் லீக்கை பற்றி பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தலைசிறந்த ஃபாஸ்ட் பவுலருமான வாசிம் அக்ரம் பேசியுள்ளார். 

ஐபிஎல்லை விட பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் தான் ஃபாஸ்ட் பவுலிங் தரமாக இருப்பதாக வெளிநாட்டு வீரர்கள் தெரிவித்ததாக வாசிம் அக்ரம் கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் அக்ரம், பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஐபிஎல்லுடன் ஒப்பிட முடியாது. ஐபிஎல்லுக்கு முன் பி.எஸ்.எல் கத்துக்குட்டி. வெறும் 5 சீசன்கள் மட்டுமே நடந்துள்ள நிலையில், 12 சீசன்களை நடத்தியுள்ள ஐபிஎல்லுடன் ஒப்பிட முடியாது. ஆனால், பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஃபாஸ்ட் பவுலிங் தரம் சிறப்பாக உள்ளது. நான் நிறைய வெளிநாட்டு வீரர்களிடம் ஐபிஎல் மற்றும் பி.எஸ்.எல் இடையேயான வித்தியாசத்தை கேட்டிருக்கிறேன். அப்போது, அவர்கள் சொன்னது ஒரே விஷயம் தான். ஐபிஎல்லைவிட பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் ஃபாஸ்ட் பவுலிங் சிறப்பாக உள்ளது என்று வெளிநாட்டு வீரர்கள் சொன்னதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios