Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா செயல்பாட்டின் மீது வாசிம் அக்ரம் அதிருப்தி

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டின் மீது வாசிம் அக்ரம் கடும் அதிருப்தியில் உள்ளார்.
 

wasim akram disappointed with the decisions taken by pcb chairman ramiz raja
Author
Pakistan, First Published Oct 19, 2021, 9:51 PM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அண்மையில் பதவியேற்றார். ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராவது உறுதியானதுமே, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து விலகினர் மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ்.

2019ம் ஆண்டிலிருந்து பயிற்சியாளர்களாக இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துவந்த தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும், டி20 உலக கோப்பை நெருங்கிய நிலையில், திடீரென ராஜினாமா செய்தனர்.

இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டின் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் வாசிம் அக்ரம்.

இதையும் படிங்க - சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக அவரை ஆடவைத்தால் இந்திய அணியின் லெவலே வேற..! சல்மான் பட் கருத்து

இதுகுறித்து பேசிய வாசிம் அக்ரம், ஒரு நிறுவனம்/அமைப்பின் சி.இ.ஓ அல்லது தலைவராக பொறுப்பேற்பவர் முதல் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஊழியர்களின் செயல்பாட்டை மதிப்பீடு செய்ய வேண்டும். அதன்பின்னர் தான் மாற்றங்கள் எதுவும் தேவையென்றால் அவற்றை செய்யவேண்டும். 

ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடு இயல்பானதாக இல்லை. முடிந்தது முடிந்ததுதான். ஆனால் மிஸ்பாவும் வக்காரும் கடுமையாக உழைத்தார்கள் என்பது மட்டும் எனக்கு நன்றாக தெரியும் என்று வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios